மியாமி ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் அரையிறுதிக்கு முன்னேற்றம்
மெட்விடேவ் அரையிறுதியில் மற்றொரு முன்னணி வீரரான ஜானிக் சின்னர் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.;
மியாமி,
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. பல முன்னணி வீரர்கள் பங்கேற்றிருந்த இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான டேனில் மெட்விடேவ் ( ரஷ்யா), நிக்கோலஸ் ஜாரி (சிலி) உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மெட்விடேவ் 6-2 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் ஜாரியை எளிதில் வீழ்த்திய அவர் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
மெட்விடேவ் அரையிறுதியில் மற்றொரு முன்னணி வீரரான ஜானிக் சின்னர் ( இத்தாலி) உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.