மராகேச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி
அரைஇறுதி போட்டியில் யுகி பாம்ப்ரி - அல்பானோ ஆலிவிவெட்டி ஜோடி தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
மராகேச்,
மராகேச் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி மொராக்கோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் யுகி பாம்ப்ரி (இந்தியா) - அல்பானோ ஆலிவிவெட்டி (பிரான்ஸ்) இணை, ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எர்லெர்-லூகாஸ் மிட்லெர் ஜோடியை எதிர்கொண்டது.
1 மணி 41 நிமிடம் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி - அல்பானோ ஆலிவெட்டி இணை 5-7, 6-3, 7-10 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் - லூகாஸ் மிட்லெர் இணையிடம் போராடி தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறியது.