மாட்ரிட் ஓபன் டென்னிஸ்; சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்
களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
மாட்ரிட்,
களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் பெலாரசின் அரினா சபலென்காவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட ஸ்வியாடெக் 7-5, 4-6, 7-6 (9-7) என்ற புள்ளிக்கணக்கில் பெலாரசின் அரினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.