ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல்

ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல் தகுதி பெற்றுள்ளார்.

Update: 2024-06-23 06:13 GMT

image courtesy: AFP

சென்னை,

உலக ஒற்றையர் தரவரிசையில் 71-வது இடத்தில் இருக்கும் இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல் அடுத்த மாதம் பாரீசில் தொடங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதனை சுமித் நாகல் நேற்று உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இது குறித்து அவர் தனது 'எக்ஸ்' தள பதிவில், 'பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு அதிகாரபூர்வமாக தகுதி பெற்று இருப்பதை அனைவருக்கும் தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒலிம்பிக் போட்டி என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று என்பதால் இது எனக்கு மறக்கமுடியாத தருணமாகும். இதுவரை எனது டென்னிஸ் வாழ்க்கையில் 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றதே உயர்ந்த பட்சமாகும். அதன் பிறகு பாரீஸ் ஒலிம்பிக்கில் விளையாடுவதே எனது பெரிய இலக்காக இருந்தது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆவலுடன் இருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்