ஹாலே ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னெர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் சின்னெர், சீனாவின் ஸ்ஹாங் ஸிஷென் உடன் மோத உள்ளார்.

Update: 2024-06-22 10:17 GMT

Image Courtesy: AFP

பெர்லின்,

ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஜன்னிக் சின்னெர், ஜெர்மனியின் ஜான்-லெனார்ட் ஸ்ட்ரப் உடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜன்னிக் சின்னெர் 6-2, 6-7 (1-7), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஜான்-லெனார்ட் ஸ்ட்ரபை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் சின்னெர், சீனாவின் ஸ்ஹாங் ஸிஷென் உடன் மோத உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்