பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினாவை வீழ்த்தி ஸ்வியாடெக் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Update: 2023-05-30 23:29 GMT

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவருமான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 6-4, 6-2 என்ற நேர் செட்டில் பிரன்டா புர்விர்தோவாவை (செக்குடியரசு) வெளியேற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

அதே சமயம் 2021-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் சாம்பியனான பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) 2-6, 4-6 என்ற நேர் செட்டில் லெசியா சுரென்கோவிடம் (உக்ரைன்) வீழ்ந்தார். நேற்று தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடிய சுரென்கோவுக்கு பிறந்த நாள் பரிசாக இந்த வெற்றி கிட்டியது.

மற்றொரு ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினாவுடன் மோதினார். இதில் ஸ்வியாடெக் 6-4, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்