பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; நோவக் ஜோகோவிச் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நோவக் ஜோகோவிச் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

Update: 2024-05-29 01:58 GMT

image courtesy: AFP

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பிரான்சின் பியர்-ஹியூஸ் ஹெர்பர்ட்டை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட ஜோகோவிச் 6-4, 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் பியர்-ஹியூஸ் ஹெர்பர்ட்டை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்