பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : கரோலின் கார்சியா - கிறிஸ்டினா ஜோடி சாம்பியன் பட்டம் வென்று சாதனை
பெண்கள் இரட்டையர் பிரிவில் கரோலின்- கிறிஸ்டினா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றனர்.;
பாரீஸ்,
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட இந்த டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
அதை தொடர்ந்து ஆண்கள் இரட்டையர் பிரிவின் மார்செலோ அரேவலோ மற்றும் ஜீன்-ஜூலியன் ரோஜர் ஜோடி தங்களது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளனர். இந்த நிலையில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் பிரான்சின் கரோலின் கார்சியா மற்றும் கிறிஸ்டினா மிலாடெனோவிக் ஜோடி 2-6 6-3 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கோகோ காஃப் மற்றும் ஜெசிகா பெகுலா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றனர்.