பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறினார் மிர்ரா ஆண்ட்ரீவா
ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா சக நாட்டவரான அன்னா பிளிங்கோவா உடன் மோதினார்.;
பிரிஸ்பேன்,
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா சக நாட்டவரான அன்னா பிளிங்கோவா உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மிர்ரா ஆண்ட்ரீவா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அன்னா பிளிங்கோவாவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.