சீனா ஓபன் டென்னிஸ்: கார்லஸ் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு தகுதி

இவர் 3-வது சுற்றில் கிரீக்ஸ்பூர் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

Update: 2024-09-27 15:27 GMT

image courtesy: AFP

பெய்ஜீங்,

பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீன ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜியோவானி எம்பெட்ஷி (பிரெஞ்சு) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-4 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் கைப்பற்றி எளிதில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அல்காரஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இவர் 3-வது சுற்றில் கிரீக்ஸ்பூர் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்