சிலி ஓபன் டென்னிஸ்; டயஸ் அகோஸ்டா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

இவர் தனது 2-வது சுற்று ஆட்டத்தில் பெட்ரோ மார்ட்டினஸ் உடன் மோத உள்ளார்.

Update: 2024-02-28 12:49 GMT

image courtesy;AFP

சாண்டியாகோ,

சிலி ஓபன் டென்னிஸ் தொடர் சாண்டியாகோவில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா ஓபன் சாம்பியனான டயஸ் அகோஸ்டா ( அர்ஜென்டினா), சக நாட்டவரான பெட்ரோ காச்சின் உடன் மோதினார்.

விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட் டை -  பிரேக்கருக்கு நகர்ந்தது. இதில் டை - பிரேக்கரில் போராடி அந்த செட்டை டயஸ் அகோஸ்டா கைப்பற்றி வெற்றி பெற்றார்.

3 மணி நேரம் 9 நிமிடங்கள் இந்த போட்டியில் டயஸ் அகோஸ்டா 5-7, 6-3 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர் தனது 2-வது சுற்று ஆட்டத்தில் பெட்ரோ மார்ட்டினஸ் உடன் மோத உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்