சென்னை சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான டிக்கெட் விலை வெளியீடு

சென்னையில் நடைபெறும் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான டிக்கெட் விலை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-08-24 03:25 GMT

சென்னை,

சென்னை ஓபன் டபிள்யு.டி.ஏ. 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 12-ந்தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 18-ந்தேதி வரை இந்த போட்டி ஒரு வாரம் நடக்கிறது. சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு மிகவும் பிரம்மாண்ட முறையில் நடத்தி முடித்தது. தற்போது சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு கொடுத்துள்ளார். இந்த போட்டியின் முக்கிய ஸ்பான்சராக தமிழக அரசு உள்ளது.

இந்த நிலையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான டிக்கெட் விலை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 7 நாட்கள் நடைபெறும் போட்டிகளுக்கான சீசன் டிக்கெட்டுகளுக்கு ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையிலான நாட்களுக்கு தினசரி டிக்கெட் கட்டணமாக ரூ.100, ரூ.200, ரூ.300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசி மூன்று நாட்களுக்கான டிக்கெட் கட்டணமாக ரூ.200, ரூ.400, ரூ.600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்