பெர்லின் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்ட அசரென்கா

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-06-23 11:20 GMT

கோப்புப்படம்

பெர்லின்,

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் அன்னா காலின்ஸ்கயா, முன்னணி வீராங்கனையான பெலாரசின் விக்டோரியா அசரென்கா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கில் காலின்கயாவும், 2வது செட்டை 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் அசரென்காவும் கைப்பற்றினார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் முன்னணி வீராங்கனையான அசரென்கா 1-6 என்ற புள்ளிக்கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

இறுதியில் இந்த ஆட்டத்தில் 6-1 , 6-7 (3-7), 6-1 என்ற புள்ளிக்கணக்கில் ரஷியாவின் அன்னா காலின்ஸ்கயா கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்