அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்குகிறது.

Update: 2024-01-14 02:01 GMT

Image Courtesy: @AdelaideTennis

அடிலெய்டு,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டமான அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் பிரெஞ்ச் ஓபன் முன்னாள் சாம்பியனும், உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருப்பவருமான லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ 6-3, 6-2 என்ற நேர்செட்டில் டாரியா கசட்கினாவை (ரஷியா) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செக்குடியரசு வீரர் ஜிரி லெஹக்கா 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ஜாக் டிராப்பரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி 5-7, 7-5, 9-11 என்ற செட் கணக்கில் ராஜீவ் ராம் (அமெரிக்கா)-ஜோ சாலிஸ்புரி (இங்கிலாந்து) இணையிடம் தோற்று 2-வது இடம் பிடித்தது.


Tags:    

மேலும் செய்திகள்