அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: அரைஇறுதியில் மெட்விடேவ், ஜோகோவிச்

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியின் அரைஇறுதியில் மெட்விடேவ்-ஜோகோவிச் மோதுகிறார்கள்.

Update: 2023-01-06 21:17 GMT

Image Courtesy : @AdelaideTennis twitter

அடிலெய்டு,

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 6-3, 6-3 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் கரென் கச்சனோவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா தன்னை எதிர்த்த 15-ம் நிலை வீரர் ஜானிக் சின்னெரை (இத்தாலி) 7-5, 6-1 என்ற நேர்செட்டில் சாய்த்தார். ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷிகா 7-6 (7-4), 6-7 (6-8), 6-2 என்ற செட் கணக்கில் போராடி அலெக்ஸி பாப்பிரினை (ஆஸ்திரேலியா) விரட்டியடித்து அரைஇறுதியை எட்டினார்.

இன்னொரு ஆட்டத்தில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள டெனிஸ் ஷபோவாலோவை (கனடா) சந்தித்தார். 1 மணி 55 நிமிடம் நடந்த விறுவிறுப்பான இந்த மோதலில் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் ஷபோவாலோவை துவம்சம் செய்து அரைஇறுதிக்கு முன்னேறினார். அடுத்து ஜோகோவிச்-மெட்விடேவ் கோதாவில் குதிக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்