அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: கனடா வீரர் அலியாசிம் வெளியேற்றம்

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

Update: 2023-01-02 20:18 GMT

அடிலெய்டு,

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் 6-ம் நிலை வீரர் கனடாவின் அலியாசிம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை தரவரிசையில் 120-வது இடம் வகிக்கும் தகுதி நிலை வீரர் ஆஸ்திரேலியாவின் அலெக்சி போப்ரின் 6-4, 7-6 (5) என்ற நேர் செட்டில் தோற்கடித்தார்.

11-ம் நிலை வீரர் ஹோல்ஜர் ருனே (டென்மார்க்) 6-2, 4-6, 4-6 என்ற நேர் செட்டில் ஜப்பானின் நிஷியாகாவிடம் பணிந்தார். இதே போல் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் நோவக் ஜோகோவிச் (செர்பியா)- வாசெக் போஸ்பிசில் (கனடா) இணை 6-4, 3-6, 5-10 என்ற செட் கணக்கில் டாமிஸ்லாவ் பிர்கிச் (போஸ்னியா)- கோன்சலோ எஸ்கோபர் (ஈகுவடார்) ஜோடியிடம் அதிர்ச்சிகரமாக வீழ்ந்தது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் 21-ம் நிலை வீராங்கனை எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 5-7, 6-2, 6-3 என்ற நேர் செட்டில் டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா)சாய்த்தார். கனேபி (எஸ்தோனியா), சம்சோனோவா, வெரோனிகா குடெர்மித்தோவா (ரஷியா), லின்டா நோஸ்கோவா (செக்குடியரசு) ஆகியோரும் தங்களது முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்