உலக பெண்கள் டென்னிஸ்: கிரீஸ் வீராங்கனை அரைஇறுதிக்கு முன்னேற்றம்

உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

Update: 2021-11-16 21:27 GMT
குவாடலஜரா,

‘டாப்-8’ வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றுள்ள உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒற்றையர் கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, 7-6 (7-1), 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் 2-ம் நிலை வீராங்கனையான சபலென்காவை (பெலாரஸ்) வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தார். 

மற்றொரு லீக் ஆட்டத்தில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 7-5, 6-4 என்ற நேர்செட்டில் பாலா படோசாவை (ஸ்பெயின்) சாய்த்து ஆறுதல் வெற்றி கண்டார். லீக் சுற்று முடிவில் பாலா படோசா முதலிடத்தையும், மரியா சக்காரி 2-வது இடத்தையும் பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.

மேலும் செய்திகள்