ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் செரீனா வில்லியம்ஸ், நடால்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
மெல்போர்ன்,
கால்இறுதியில் செரீனா
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 4–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 2–வது இடத்தில் இருப்பவரும், 22 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்றவருமான அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 16–ம் நிலை வீராங்கனை பார்போரோ ஸ்டிரிகோவாவை (செக் குடியரசு) எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் 7–5, 6–4 என்ற நேர்செட்டில் பார்போராவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 9–வது இடத்தில் உள்ள ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) 6–1, 6–4 என்ற நேர்செட்டில் 30–ம் நிலை வீராங்கனை மகரோவாவை (ரஷியா) தோற்கடித்து தொடர்ந்து 2–வது முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதி ஆட்டத்தில் ஜோஹன்னா, செரீனா வில்லியம்சை சந்திக்கிறார்.
ரபெல் நடால் வெற்றி
இன்னொரு ஆட்டத்தில் குரோஷியா வீராங்கனை மிர்ஜனா லுசிச் 6–4, 6–2 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராட்டியை தோற்கடித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் 5–ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு) 6–3, 6–3 என்ற நேர்செட்டில் 22–ம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் டாரியா காவ்ரிலோவாவை சாய்த்து கால்இறுதிக்குள் முதல்முறையாக தடம் பதித்தார். கால்இறுதியில் கரோலினா பிளிஸ்கோவா–மிர்ஜனா லுசிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4–வது சுற்று ஆட்டம் ஒன்றில் 15–ம் நிலை வீரர் டிமித்ரோவ் (பல்கேரியா) 2–6, 7–6, (7–2), 6–2, 6–1 என்ற செட் கணக்கில் 2–வது சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்து இருந்த 119–ம் நிலை வீரர் டெனிஸ் இஸ்தோமினை (உஸ்பெகிஸ்தான்) சாய்த்து 2–வது முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் உலகின் 9–ம் நிலை வீரரும், 2009–ம் ஆண்டு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6–3, 6–3, 4–6, 6–4 என்ற செட் கணக்கில் 6–ம் நிலை வீரர் மான்பில்சை (பிரான்ஸ்) தோற்கடித்து 9–வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.
டேவிட் கோபின்
மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 11–வது இடத்தில் இருக்கும் டேவிட் கோபின் (பெல்ஜியம்) 5–7, 7–6 (7–4), 6–2, 6–2 என்ற செட் கணக்கில் 8–ம் நிலை வீரர் டோமினிச் திம்மை (ஆஸ்திரியா) வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் டிமித்ரோவ்–டேவிட் கோபின் மோதுகிறார்கள்.
இன்னொரு ஆட்டத்தில் 3–ம் நிலை வீரர் மிலோஸ் ராவ்னிக் (கனடா) 7–6 (8–6), 3–6, 6–4, 6–1 என்ற செட் கணக்கில் 13–ம் நிலை வீரர் பாவ்டிஸ்டா அகுத்தை (ஸ்பெயின்) வீழ்த்தி தொடர்ந்து 3–வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.
கால்இறுதியில் லியாண்டர் பெயஸ் ஜோடி
கலப்பு இரட்டையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து)–லியாண்டர் பெயஸ் (இந்தியா) ஜோடி 6–2, 6–3 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் டெல்லாகு–மாட் ரீட் இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி கண்டது.