கைப்பந்து; யுனைடெட் வாலிபால் அகாடமி அணி சாம்பியன்

யுனைடெட் வாலிபால் அகாடமி அணி 25-9, 22-22 என்ற நேர் செட்டில் இந்துஸ்தான் கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.;

Update:2023-10-16 08:07 IST

சென்னை,

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் பிரிவில் யுனைடெட் வாலிபால் அகாடமி அணி 25-9, 22-22 என்ற நேர் செட்டில் இந்துஸ்தான் கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

வெற்றி பெற்ற அணிக்கு முன்னாள் டி.ஜி.பி. எம்.ரவி பரிசுக்கோப்பையை வழங்கினார். பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் எம்.அழகேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்