23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக மல்யுத்த போட்டி: முதன்முறையாக 3 பதக்கங்கள் வென்று இந்திய வீரர்கள் சாதனை!

23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரீகோ ரோமன் பந்தயத்தில் இந்திய அணியினர் 3 பதக்கங்கள் வெல்வது இதுவே முதல் முறையாகும்.;

Update:2022-10-20 13:25 IST

பாண்டேவெட்ரா,

23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள பாண்டேவெட்ரா நகரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்களுக்கான கிரீகோ ரோமன் பந்தயத்தில் இந்திய வீரர் சஜன் பன்வாலா, உக்ரைன் வீரர் டிமிட்ரோ வாசெட்ஸ்கியுடன் மல்லுகட்டினார். இதில் முதலில் பின்தங்கி இருந்த சஜன் பன்வாலா கடைசி நேரத்தில் அபாரமாக செயல்பட்டு 10-10 என்ற புள்ளி கணக்கில் சமநிலையை எட்டினார். கடைசி புள்ளியை எடுத்ததன் அடிப்படையில் சஜன் பன்வாலா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனால் அவருக்கு வெண்கலப்பதக்கம் கிட்டியது. இதன் மூலம் அரியானாவை சேர்ந்த சஜன் பன்வாலா இந்த போட்டியில் கிரீகோ ரோமன் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

அதே போல, 97 கிலோ எடைப்பிரிவில் நிடேஷ் மற்றும் 72 கிலோ எடைப்பிரிவில் விகாஷ் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினர்.

ஆண்களுக்கான கிரீகோ ரோமன் பந்தயத்தில் இந்திய அணியினர் 3 பதக்கங்கள் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்