அகமதாபாத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி வீரருக்கு உற்சாக வரவேற்பு

அகமதாபாத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;

Update:2022-05-24 12:36 IST

திருச்சி:

மாநில அளவிலான கராத்தே பிளாக் பெல்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் திருச்சி மாவட்டத்திலிருந்து சங்கர் என்பவர் கலந்து கொண்டு வெற்றி அடைந்தார்.

பின்னர் அவர் விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார். அவருக்கு கராத்தே மாஸ்டர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதுகுறித்து கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற சங்கர் கூறியதாவது;-

இதுபோன்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு அதிகமான பதக்கங்களை குறிப்பதே என்னுடைய கனவாகும். தொடர்ந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அந்த வகையில் அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்