ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரைஇறுதிக்கு தகுதி
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.;
மாட்ரிட்,
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற கால்இறுதி போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, டேனிஷ் வீராங்கனை மியா பிளிச்ஃபெல்ட்டுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பி.வி.சிந்து 21-14, 21-17 என்ற செட் கணக்கில் மியாவை வீழ்த்தி அரைஇறுதி போட்டிக்கு முன்னேறினார்.