புரோ கபடி லீக் போட்டி: 118 வீரர்கள் ஏலம்
புரோ கபடி லீக் போட்டிக்கான ஏலத்தில் 118 வீரர்கள் விலை போனார்கள்.;
மும்பை,
10-வது புரோ கபடி லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் 2 நாட்கள் நடந்தது. இதில் 118 வீரர்கள் விலை போனார்கள். அவர்களை 12 அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் வாங்கினர்.
இந்திய அணியின் கேப்டனான பவான் செராவத்தை அதிகபட்சமாக ரூ.2.6 கோடிக்கு தெலுங்கு டைட்டன்ஸ் எடுத்தது. முன்னதாக ஈரான் வீரர் ஷட்லோய் சியானேசை ரூ.2.35 கோடிக்கு புனே அணி இழுத்தது.