84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி...!

இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி பெற்றுள்ளார்.;

Update: 2023-12-02 03:46 GMT

Image Credits : Twitter.com/@rpragchess

புதுடெல்லி,

தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார். இதன்மூலம் இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளை பதிவு செய்ததன் மூலம் 2,500 புள்ளிகளை வைஷாலி கடந்தார். இவர் இதன்மூலம் இந்திய அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெரும் 3வது பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இவர் பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்