செஸ் ஒலிம்பியாட் 2வது சுற்று : இன்று களம் காண்கிறார் பிரக்ஞானந்தா..!

இன்று நடைபெறவுள்ள 2வது சுற்று ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா இன்று களம் இறங்குகிறார்

Update: 2022-07-30 08:08 GMT

மாமல்லபுரம்,

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று ஆட்டம் மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள 2வது சுற்று ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா இன்று களம் இறங்குகிறார்.இந்திய 'பி' அணியில் இடம் பெற்றுள்ள பிரக்ஞானந்தாவுக்கு நேற்று முதல் சுற்று ஆட்டத்தில் ஒய்வு அளிக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று அவர் களமிறங்குகிறார்.

இந்திய 'பி' அணி , எஸ்டோனியா அணியுடன் மோதுகிறது.சரின்,குகேஷ் ,பிரக்ஞானந்தா,அதிபன்,ரவுனாக் சத்வானி ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்