காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியாக பிரதமர் மோடி கலந்துரையாடல்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022 பர்மிங்காமில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளன.

Update: 2022-07-18 13:05 GMT

புதுடெல்லி,

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022 பர்மிங்காமில் 2022 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவில் இருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய அணியினருடன் ஜூலை 20 அன்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடவிருக்கிறார்.

இந்த கலந்துரையாடலில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளோடு அவர்களின் பயிற்சியாளர்களும் பங்கேற்பார்கள். முக்கியமான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியாக இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு டோக்கியோ 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லவிருந்த இந்திய விளையாட்டு அணியினருடனும், டோக்கியோ 2022, பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு செல்லவிருந்த இந்திய பாரா விளையாட்டு அணியினருடனும், பிரதமர் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்