பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு 3வது பதக்கம்...வெண்கலம் வென்றார் பிரீத்தி

பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.;

Update: 2024-08-30 12:26 GMT

பாரீஸ்,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 100 மீ ஓட்டப்பந்தய இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் 14.21 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து இந்திய வீராங்கனை பிரீத்தி பால் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். சீனா வீராங்கனைகள் சியா 13.58 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கமும், குவோ 13.74 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கமும் வென்றனர். 

ஏற்கனவே துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவனி லேகரா தங்கப் பதக்கமும் மோனா அகர்வால் வெள்ளிப்பதக்கம் வென்றனர். இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை  3 ஆக உயர்ந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்