பாரா துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடர்: வெண்கல பதக்கம் வென்றார் இந்தியாவின் ராகுல் ஜாகர்
இந்த தொடரின் 2-வது நாளான இன்று இந்திய அணி முதல் பதக்கத்தை வென்றுள்ளது.;
அல் ஐன்,
பாரா துப்பாக்கிசுடுதல் உலக சாம்பியன்ஷிப் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் ஐன் நகரத்தில் நேற்று தொடங்கியது. இந்த தொடரின் 2-வது நாளான இன்று இந்திய அணி முதல் பதக்கத்தை வென்றுள்ளது. இந்திய வீரர் ராகுல் ஜாகர் கலப்பு ஒற்றையர் 25மீட்டர் பிஸ்டல் எஸ்எச்1 பிரிவில் 21 மதிப்பெண்களுடன் வெண்கலப் பதக்கத்தை தட்டி சென்றார்.
இதை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் இந்திய கலப்பு அணி 25மீட்டர் பிஸ்டல் எஸ்எச்1-ல் ராகுல் ஜாகர் , நிஹால் மற்றும் சிங்ராஜ் ஆகியோர் தங்கப் பதக்கத்தை வென்றனர். இதன் மூலம் இந்திய அணி இன்று தற்போது வரை 2 பதக்கங்களை வென்றுள்ளது.