பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் - தமிழக வீரர், வீராங்கனைகள் பதக்கம் வென்று அசத்தல்
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் திருவள்ளூரைச் சேர்ந்த மனீஷா தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.;
டோக்கியோ,
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை மனீஷா ராமதாஸ் உடன் ஜப்பான் வீராங்கனை மாமிகோ டொயோட்டா மோதினார்.
இதில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி மனீஷா தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். இதே போல் கலப்பு இரட்டையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ருத்திக் ரகுபதி 2 வெண்கல பதக்கங்களை வென்றார். மேலும் ஓசூரைச் சேர்ந்த நித்யஸ்ரீ ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய 3 பிரிவுகளிலும் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.