ஒலிம்பிக்கில் வெற்றி வாகை சூட நேத்ராவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
தமிழ்நாட்டு வீராங்கனை நேத்ரா 2-ஆவது முறையாக ஒலிம்பிக் படகுப்போட்டியில் களம் காணவுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26-ம் தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்க நேத்ரா குமணன் தகுதி பெற்றதாக, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேத்ரா குமணன் ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாரீஸ் ஒலிம்பிக்கிலும் தகுதி பெற்றதன் மூலம் இரு ஒலிம்பிக் போட்டிகளில் தகுதி பெற்ற ஒரே வீராங்கனை என்ற பெருமை பெற்றுள்ளார்..