மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : பி.வி.சிந்து, பிரணாய் காலிறுதிக்கு தகுதி..!!
ஜாங் யி மன்னை நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து எளிதாக வெற்றி பெற்றார்.;
கோலா லம்பூர்,
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அதன் தலைநகர் கோலா லம்பூரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இன்று விளையாடினார். இந்த போட்டியில் தரவரிசையில் 32 வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஜாங் யி மன்னை எதிர்கொண்டார் சிந்து .
28 நிமிடங்களே நடந்த இந்த போட்டியில் 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்கில் ஜாங் யி மன்னை வீழ்த்தி பி.வி.சிந்து எளிதாக வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற போட்டி ஒன்றில் இந்தியாவின் பிரணாய் 21-19 21-16 என்ற கணக்கில் சீன தைபேயின் வாங் சூ வெய்யை வீழ்த்தினார். அவர் காலிறுதியில் ஜப்பானின் காண்டா சுனேயாமாவை எதிர்கொள்கிறார்.