டென்னிஸ் போட்டி: குறைந்தபட்சம் வெள்ளி பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா
ஆசிய விளையாட்டு: ஆடவர் இரட்டையர் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் தென் கொரியாவின் சியோங்சான் ஹாங் மற்றும் சூன்வூ குவான் ஜோடியை இந்தியாவின் சாகேத் மைனேனி மற்றும் ராமநாதன் ராம்குமார் ஜோடி எதிர்த்து விளையாடியது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 6-1, 6-7(6), 10-0 என்ற செட் கணக்கில் அசத்தல் வெற்றியை பெற்ற இந்தியா, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டியில் தாய்லாந்தின் இசாரோ ப்ரச்யா- ஜோன்ஸ் மேக்சிமஸ் பரபோல் ஜோடி, இந்தியாவின் சாகேத் மைனேனி மற்றும் ராமநாதன் ராம்குமார் ஜோடியை எதிர்கொள்கிறது. முன்னதாக மற்றொரு அரையிறுதி போட்டியில் சீனாவை 6-4, 7-6 (5)என்ற செட் கணக்கில் வென்று இசாரோ ப்ரச்யா- ஜோன்ஸ் மேக்சிமஸ் பரபோல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தங்க பதக்கத்திற்கான போட்டியில் நாளை தாய்லாந்தும் இந்தியாவும் பலப்பரிட்சை நடத்துகின்றன. இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளி அல்லது தங்கம் என இரண்டில் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.
டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மாலத்தீவின் முகமது சஃபான் இஸ்மாயிலை முதல் சுற்றில் விழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் ஷரத் கமல்.
பதக்கங்களை குவிக்கும் இந்தியா...!
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இன்று 5-வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.
குதிரையேற்றம் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டி தொடரின் குதிரையேற்றம் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது. தனிநபர் (dressage) போட்டியில் இந்தியாவின் அனுஷ் அகர்வல்லா வெண்கல பதக்கத்தை தனதாக்கினார். நடப்பு ஆசிய விளையாட்டு தொடரில் குதிரையேற்றம் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்து இருக்கும் 2-வது பதக்கம் இதுவாகும்.
அனுஷ் அகர்வல்லா 73.030 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். மலேசியாவின் முகம்மது குபில் அம்பாங் 75.780 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கமும், ஹாங்காங்கின் ஜாகுலின் விங் யிங் 73.450 புள்ளிகள் பெற்று தங்கமும் வென்றனர்.
டேபிள் டென்னிஸ் போட்டி: பதக்கத்தை உறுதி செய்த இந்திய வீரர்கள்...!
சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வரும் 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் மனிகா பத்ரா, மனுஷ் ஷா மற்றும் மானவ் விகாஷ் ஆகியோர் டேபிள் டென்னிஸ்ஸின் 32வது சுற்றில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
குவாஷ் ஆண்களுக்கான போட்டியில் நேபாளத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அபய் சிங் (இந்தியா) அம்ரித் தாபாவை (நேபாளம்) தோற்கடித்து 1-0 என்ற செட் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
குவாஷ் ஆண்களுக்கான போட்டியில் நேபாளத்திற்கு எதிராக இந்தியா இப்போது அதிரடியில் உள்ளது.
ஸ்குவாஷ் மகளிர் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மலேசியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா.
ஜிம்னாஸ்டிக்ஸ்: பதக்கப் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை பிரணதி நாயக் வெளியேறினார்
குத்துச்சண்டைபோட்டியில் இந்திய வீராங்கனை ஜெய்ஸ்மின், பெண்களுக்கான (57-60 கிலோ எடை பிரிவில்) இரண்டாவது சுற்றில் சவுதி வீராங்கனை ஹடீல் கஸ்வான் அஷூரை வீழ்த்தினார்.