ஸ்குவாஷ் (மகளிர் அணி): மலேசியாவிடம் 0-3 என்ற கணக்கில் இந்தியா தோல்வி
டேபிள் டென்னிஸ்: ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு ரவுண்ட் ஆப் 32 போட்டியில் இந்தியா- மாலத்தீவு மோதின. இதில், 1-3 என்ற செட் கணக்கில் மாலத்தீவை வீழத்தி இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது.
இதேபோல், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு ரவுண்ட் ஆப் 32ல் இந்தியா- மங்கோலியா மோதின. இதில், 3-0 என்ற செட் கணக்கில் மங்கோலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது.
டேபிள் டென்னிஸ்: 32வது சுற்றில் இந்திய ஜோடி மானவ் தக்கர் மற்றும் மனுஷ் ஷா 3-1 (11-8, 9-11, 11-6, 11-2) என்ற செட் கணக்கில் மாலத்தீவின் மூசா முன்சிப் அகமது மற்றும் முகமது ஷஃபான் இஸ்மாயில் ஜோடியை வீழ்த்தி 16-வது சுற்றுக்கு முன்னேறியது.
ஸ்குவாஷ் போட்டியில் பெண்களுக்கான குழு பூல் பி பிரிவில் இந்தியா- மலேசியா மோதின. இதில், இந்தியாவை 1-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி மலேசியா வென்றது.
தங்கம் பெற முடியாமல் போனதில் வருத்தம் - ரோஷிபினா தேவி
ஆசிய விளையாட்டு போட்டியின் வுஷூ மகளிர் 60 கிலோ இறுதி சுற்று போட்டியில் இந்தியாவின் ரோஷிபினா தேவி வெள்ளி பதக்கம் வென்றார். வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் தங்கப் பதக்கத்தைப் பெற முடியாமல் போனதில் எனக்கும் கொஞ்சம் வருத்தமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நீச்சலில் பெண்களுக்கான 4X200 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே போட்டியில், 4ம் இடம் பிடித்து இந்தியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா 4-0 (11-5, 11-4, 11-3, 11-2) என்ற செட் கணக்கில் நேபாளத்தின் நபிதா ஸ்ரேஸ்தாவை வீழ்த்தி 16-வது சுற்றுக்கு முன்னேறினார்.
நீச்சலில் ஆண்களுக்கான 4X100 மீட்டர் ப்ரீஸ்பைல் ரிலே போட்டியில், 3ம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இந்தியா.
துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டியில், இந்திய வீரர் சராப்ஜோட் சிங் 4வது இடமும், அர்ஜூன் சீமா 8வது இடமும் பிடித்து ஏமாற்றம் அடைந்தனர்.
பதக்க பட்டியலில் 5ம் இடத்தில் இந்தியா...!
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இன்று 5-வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.