டென்னிஸ் போட்டி: குறைந்தபட்சம் வெள்ளி பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா

ஆசிய விளையாட்டு: ஆடவர் இரட்டையர் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் தென் கொரியாவின் சியோங்சான் ஹாங் மற்றும் சூன்வூ குவான் ஜோடியை இந்தியாவின் சாகேத் மைனேனி மற்றும் ராமநாதன் ராம்குமார் ஜோடி எதிர்த்து விளையாடியது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 6-1, 6-7(6), 10-0 என்ற செட் கணக்கில் அசத்தல் வெற்றியை பெற்ற இந்தியா, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப்போட்டியில் தாய்லாந்தின் இசாரோ ப்ரச்யா- ஜோன்ஸ் மேக்சிமஸ் பரபோல் ஜோடி, இந்தியாவின் சாகேத் மைனேனி மற்றும் ராமநாதன் ராம்குமார் ஜோடியை எதிர்கொள்கிறது. முன்னதாக மற்றொரு  அரையிறுதி போட்டியில் சீனாவை 6-4, 7-6 (5)என்ற செட் கணக்கில் வென்று இசாரோ ப்ரச்யா- ஜோன்ஸ் மேக்சிமஸ் பரபோல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தங்க பதக்கத்திற்கான போட்டியில் நாளை தாய்லாந்தும் இந்தியாவும் பலப்பரிட்சை நடத்துகின்றன. இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளி அல்லது தங்கம் என இரண்டில் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.



Update: 2023-09-28 11:02 GMT

Linked news