தேசிய ஸ்குவாஷ் போட்டி: தமிழக வீராங்கனை ஷமீனா வெண்கலம் வென்றார்
தேசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீராங்கனை ஷமீனா வெண்கலம் வென்றார்.;
சென்னை,
தேசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி மும்பையில் நடந்தது.
இதன் பெண்கள் ஒற்றைய அரைஇறுதியில் தமிழக வீராங்கனை ஷமீனா 5-11, 3-11, 5-11 என்ற நேர்செட்டில் மராட்டிய வீராங்கனை இவனா குப்தாவிடம் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.
வெண்கலப்பதக்கம் வென்ற ஷமீனா இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் முகமது ரியாசின் மகள் ஆவார்.