ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; இன்று தொடக்கம்

இந்திய வீரர்களான எச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென் பங்கேற்க உள்ளனர்.;

Update: 2023-11-14 04:18 GMT

image courtesy; PTI

குமாமோட்டோ,

ஜப்பான் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள குமாமோட்டோ நகரில் இன்று தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், காயம் காரணமாக டென்மார்க், பிரெஞ்சு ஓபன் தொடர்களில் இருந்து விலகிய இந்தியாவின் 'நம்பர் ஒன்' வீரர் எச்.எஸ்.பிரனாய் களம் திரும்புகிறார். அவர் முதல் சுற்றில் லீ செக் யுவுடன் (ஹாங்காங்) மோதுகிறார்.

மற்றொரு இந்திய வீரரான லக்ஷயா சென் முதல் ரவுண்டில் சீன வீரரான கோடாய் நராவ்காவை சந்திக்கிறார். இந்த தொடர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றாக அமைந்துள்ள ஆட்டங்களில் ஒன்றாகும். எனவே இதில் வெற்றி பெற இந்திய வீரர்கள் போராடுவர்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி இணை சீன தைபே ஜோடியான சிங் யாவ் லு மற்றும் போ ஹான் யாங் இணையை எதிர்கொள்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்