சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: 3 இந்தியர்கள் அரை இறுதிக்கு முன்னேற்றம்
சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் எகிப்தின் ஹயா அலியை தோற்கடித்து இந்திய வீராங்கனை சுனைனா குருவில்லா வெற்றி பெற்றார்.;
சென்னை,
சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் இந்திய தொடருக்கான சென்னை சுற்று சென்னையில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சுனைனா குருவில்லா (சென்னை) 8-11, 11-8, 11-8, 11-5 என்ற செட் கணக்கில் எகிப்தின் ஹயா அலியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனை தன்வி கண்ணா 11-8, 11-9, 7-11, 11-5 என்ற செட் கணக்கில் எகிப்தின் மின்னா வாலிட்டை விரட்டியடித்து அரைஇறுதியை எட்டினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் அபய் சிங் 11-7, 3-11, 11-6, 11-9 என்ற செட் கணக்கில் சக நாட்டை சேர்ந்த வேலவன் செந்தில்குமாரை வெளியேற்றி அரைஇறுதிக்குள் நுழைந்தார்.