உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா முன்னேற்றம்

இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற அந்தஸ்தை மணிகாவிடம் இருந்து ஸ்ரீஜா தட்டிப்பறித்தார்.;

Update: 2024-04-23 21:16 GMT

Image Courtesy : @Media_SAI

புதுடெல்லி,

உலக டேபிள் டென்னிஸ் சங்கத்தின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா ஒரு இடம் முன்னேறி 38-வது இடத்தை பிடித்தார். அதே நேரத்தில் மணிகா பத்ரா இரு இடம் சரிந்து 39-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதன் மூலம் இந்தியாவின் 'நம்பர் ஒன்' டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற அந்தஸ்தை மணிகாவிடம் இருந்து ஸ்ரீஜா தட்டிப்பறித்தார்.

தெலுங்கானாவைச் சேர்ந்த 25 வயதான ஸ்ரீஜா 2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் சரத்கமலுடன் இணைந்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். உலக டேபிள் டென்னிஸ் பீடர் கார்பஸ் கிறிஸ்டி, பீடர் பெய்ரூட் ஆகிய போட்டிகளில் பட்டம் வென்றார். இதனால் அவருக்கு இந்த ஏற்றம் கிடைத்துள்ளது.

ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய தரப்பில் அதிகபட்சமாக சரத் கமல் 37-வது இடம் வகிக்கிறார். ஜி.சத்யன், மனவ் தக்கர் ஆகியோர் முறையே 60, 61-வது இடங்களை பெற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்