ரவி சாஸ்திரியின் யோசனைக்கு கம்பீர் எதிர்ப்பு

ஒரு நல்ல வீரர் இடக்கை அல்லது வலக்கை எதுவாக இருந்தாலும் எல்லா சூழலிலும் சிறப்பாக ஆடுவார் என கம்பீர் கூறியுள்ளார்.

Update: 2023-08-22 21:40 GMT

கோப்புப்படம் 

மும்பை,  

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் டாப்-7 பேட்மேன்களில் குறைந்தது 3 இடக்கை ஆட்டக்காரர்கள் இடம் பெற வேண்டியது அவசியம் என்று சமீபத்தில் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.

ரவி சாஸ்திரியின் யோசனைக்கு இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கம்பீர் கூறுகையில், 'ஒருவர் வலதுகை பேட்ஸ்மேனா அல்லது இடக்கை பேட்ஸ்மேனா என்பது முக்கியமே அல்ல. மூன்று இடக்கை ஆட்டக்காரர்கள் வேண்டும் என்ற விவாதம் முற்றிலும் பயனற்ற ஒரு சிந்தனை. நீங்கள் விளையாடுபவர்களின் தரத்தை தான் பார்க்க வேண்டும். ஒரு நல்ல வீரர் இடக்கை அல்லது வலக்கை எதுவாக இருந்தாலும் எல்லா சூழலிலும் சிறப்பாக ஆடுவார்.' என்றார்.  

Tags:    

மேலும் செய்திகள்