பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து போராடி வெற்றி

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் சீன தைபே வீரரை தோற்கடித்தார்.;

Update:2024-03-07 08:54 IST
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து போராடி வெற்றி

image courtesy: AFP

பாரீஸ்,

பாரீசில் நடந்து வரும் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 20-22, 22-20, 21-19 என்ற செட் கணக்கில் 1 மணி 20 நிமிடங்கள் போராடி கனடாவின் மிட்செல்லியை வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினார்.

ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-15, 20-22, 21-8 என்ற செட்டில் சோவ் டைன் சென்னை (சீன தைபே) தோற்கடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் பிரனாய் (இந்தியா) 17-21, 17-21 என்ற நேர் செடடில் லு குவாங்சுவிடம் (சீனா) பணிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்