"வெற்றி பெற்றாலும், நான் மிகவும் மோசமாக விளையாடினேன்" - பிரக்ஞானந்தா
செஸ் ஒலிம்பியாட்டில் ஸ்விட்சர்லாந்து வீரருக்கு எதிரான போட்டியில் தான் மோசமாக விளையாடியதாக பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.;
மாமல்லபுரம்,
செஸ் ஒலிம்பியாட்டில் ஸ்விட்சர்லாந்து வீரருக்கு எதிரான போட்டியில் தான் மோசமாக விளையாடியதாக இந்திய வீரர் பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார். இந்திய ஓபன் பிரிவு பி அணியின் பயிற்சியாளர் ரமேஷ் மற்றும் செஸ் வீரர் பிரக்ஞானந்தா செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த போட்டியில் மிகவும் மோசமாக விளையாடியதாக தெரிவித்த பிரக்ஞானந்தா, டிரா செய்ய வேண்டும் என நினைத்ததாக கூறினார். அடுத்தடுத்த போட்டிகளில் நன்றாக விளையாட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என பிரக்ஞானந்தா உறுதி அளித்தார்.