மாவட்ட கால்பந்து போட்டி: சின்னமனூர் சிவகாமி மெட்ரிக் பள்ளி சாம்பியன்

13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் சின்னமனூர் சி.என்.எம்.எஸ். சிவகாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது;

Update: 2022-06-11 16:11 GMT

சின்னமனூர் சி.என்.எம்.எஸ். சிவகாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி பள்ளியில்  நடைபெற்றது. போட்டியை பள்ளி தாளாளர் கனகவேல் தொடங்கி வைத்தார் இந்த போட்டியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் விளையாடின. இதில் சிவகாமி மெட்ரிக் மேல்நிலை பள்ளி அணி முதல் பரிசை தட்டி சென்றது. 2-வது பரிசை மகேந்திரா ஸ்போர்ட்ஸ் புட்பால் கிளப் அணியும், 3-வது பரிசை பன்னாடிக் ஸ்போர்ட்ஸ் புட்பால் கிளப் அணியும் வென்றது. இதையடுத்து போட்டியில் வெற்றிபெற்ற அணியினருக்கு பள்ளி தாளாளர் கனகவேல் கோப்பையை வழங்கினார். இதில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்