காமன்வெல்த்: பளுதூக்கும் போட்டியில் வெண்கலம் வென்ற லவ்ப்ரீத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

காமன்வெல்த்தின் பளுதூக்கும் போட்டியில் வெண்கலம் வென்று அசத்திய லவ்ப்ரீத் சிங்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.;

Update:2022-08-04 01:11 IST

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்களுக்கான பளுதூக்குதலின் (109 கிலோ) இறுதி போட்டி இன்று நடைபெற்றது.

அதில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் இப்போட்டியில் மொத்தம் 355 கிலோ தூக்கி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க்கில் 192 கிலோவும் தூக்கினார். வெண்கல பதக்கம் வென்ற லவ்ப்ரீத் சிங்-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி லவ்ப்ரீத் சிங்-க்கு வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில்,

ஆண்களுக்கான 109 கிலோ எடை பிடிவில் வெண்கலப்பதக்கம் வென்ற லவ்ப்ரீத் சிங்-க்கு வாழ்த்துக்கள். இளம் மற்றும் ஆற்றல் மிக்க லவ்ப்ரீத் தனது அமைதியான சுபாவம் மற்றும் விளையாட்டுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அனைவரையும் கவர்ந்துள்ளார். அவரின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்".

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்