காமன்வெல்த்: பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிகத் ஜரீன் அரையிறுதிக்கு முன்னேற்றம்...!
காமன்வெல்த்தின் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிகத் ஜரீன் அரையிறுதிக்கு முன்னேறினார்.;
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6வெள்ளி, 6 வெண்கலம் என 17 பதக்கங்களை கைப்பற்றி இருக்கிறது.
இந்நிலையில், பெண்களுக்கான (48-50 கிலோ) குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிகத் ஜரீன் வேல்ஸின் ஹெலன் ஜோன்ஸை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் குத்துச்சணடை போட்டியில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியானது.