காமன்வெல்த்: பார்படோஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி...!

காமன்வெல்த்தின் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் பார்படோஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Update: 2022-08-03 20:38 GMT

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பார்படோஸ் அணியுடன் மோதியது.

'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்த இந்தியா, 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் இந்திய அணி தந்து 3-வது ஆட்டத்தில் 3வது லீக் ஆட்டத்தில் பார்படோஸ் அணியுடன் மோதியது.

இதில் டாஸ் வென்ற பார்படோஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஜெமிமா 56 ரன்கள் எடுத்தார். அதன்படி 163 ரன்கல் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பார்படோஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ரேனுகா சிங் 4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார். மேக்னா சிங், ராணா, ராதா யாதவ், ஹர்மன்பிரீத் கவுர் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது பிரிவில் 2-வது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்