ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள்: ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் சுமித் அன்டில்...!
ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது.;
ஹாங்சோவ்,
ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான F64 ஈட்டி எறிதல் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சுமித் அன்டில் 73.29 மீ தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரர் புஷ்பேந்திர சிங் 62.06 மீ தூரம் எறிந்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். தற்போது வரை இந்திய அணி 10 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் வென்று 39 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.