சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: தமிழக வீரர் காலிறுதிக்கு முன்னேற்றம்

2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக வீரர் சங்கர் முத்துசாமி- டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டன்சனுடன் மோதினர்.;

Update:2025-03-21 14:41 IST
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: தமிழக வீரர் காலிறுதிக்கு முன்னேற்றம்

பாசெல்,

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக வீரர் சங்கர் , டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டன்சனுடன் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சங்கர்  18-21,21-12,21-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். அவர் காலிறுதியில் பிரான்சை சேர்ந்த சி.போபோவ்வுடன் மோதுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்