ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடர்;இந்திய அணி சாம்பியன்.....!!

இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்திய அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

Update: 2023-06-30 08:54 GMT

image courtesy;twitter/@Media_SAI

பூசன்,

தென் கொரியாவின் பூசன் நகரில் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023 தொடர் நடைபெற்று வந்தது. இதில், இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.இந்த தொடரின் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று அரங்கேறியது.

இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஈரான் மற்றும் முன்னாள் சாம்பியன் ஆன இந்திய அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 42-32 என்ற புள்ளி கணக்கில் ஈரானை விழ்த்தி தங்க பதக்கம் வென்றது.

முதல் பாதியில் இந்திய அணி 23-11 என்று முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியிலும் முன்னிலையை தக்கவைத்துக் கொண்டது.

இந்திய அணியின் கேப்டன் அணியின் கேப்டன் பவன் ஷெராவத் அதிரடியாக விளையாடி புள்ளிகளை சேகரித்தார்.அவரே இந்த ஆட்டத்தின் நாயகனாக ஜொலித்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆசிய கபடி சாம்பியன்ஷிப் கோப்பையை 8-வது முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்