லைவ்: ஆசிய விளையாட்டு; இந்தியா பதக்க வேட்டை.. பட்டியலில் 4-வது இடம்

Update: 2023-10-01 01:19 GMT
Live Updates - Page 2
2023-10-01 10:29 GMT

ஸ்குவாஷ் போட்டியின் கலப்பு இரட்டையர் ( குரூப் டி) பிரிவு ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இதில் இந்தியாவின் அனஹத் / அபேய் ஜோடி பாகிஸ்தானின் டுயோ சடியா / பர்ஹான் ஜோடியை 2-0 (11-3, 11-2) என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

2023-10-01 09:58 GMT

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

9-வது நாளான இன்று ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 11 தங்கம், 16 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தம் 42 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.

2023-10-01 09:09 GMT

துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ட்ராப் ஆடவர் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.  

2023-10-01 08:28 GMT

ஸ்குவாஷ்

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு ஏ போட்டி 73ல் இந்தியா - பாகிஸ்தான் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் பாகிஸ்தானை 2-0 என்ற செட்களில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்திய அணியில் தீபகா - ஹரிந்தர் பால் சிங் இடம்பெற்றிருந்தனர். 

2023-10-01 08:20 GMT

ஹாக்கி:

ஹாக்கி பெண்கள் பிரிலிமினெரி பிரிவு ஏ போட்டி 15ல் இந்தியா - தென்கொரியா மோதி வருகின்றன. இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியா முன்னிலையில் உள்ளது

2023-10-01 07:43 GMT

துப்பாக்கி சுடுதல்:

துப்பாக்கி சுடுதல் பெண்கள் டிரப் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை மணீஷா 6ம் இடம் பிடித்தார். இதன் மூலம் இறுதிப்போட்டியில் இருந்து வெளியேறிய மணீஷா பதக்க வாய்ப்பை இழந்தார்.

2023-10-01 07:21 GMT

குத்துச்சண்டை:

குத்துச்சண்டை பெண்கள் 57-60 கிலோ பிரிவின் காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் வடகொரிய வீராங்கனையுடன் மோதினார். இப்போட்டியில் வடகொரிய வீராங்கனை வெற்றிபெற்றார். இதனால், அரையிறுதி சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இந்திய வீராங்கனை ஜாஸ்மின் இழந்தார்.

2023-10-01 07:18 GMT

குதிரையேற்றம்:

குதிரையேற்றம் இவெண்டிங் கிராஸ் கண்ட்ரி சுற்றில் இந்திய வீரர்கள் கிஷோர் 6ம் இடத்தையும், விகாஷ் 16ம் இடத்தையும், விவேக் 20வது (கடைசி) இடத்தையும் பிடித்தனர்.

2023-10-01 06:37 GMT

குத்துச்சண்டை:

குத்துச்சண்டை பெண்கள் 54-57 கிலோ காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பர்வீன் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இப்போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை பர்வீன் வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி சுற்றுக்கு பர்வீன் முன்னேறியுள்ளார்.

2023-10-01 06:30 GMT

ரோலர் ஸ்கேட்டிங்

ரோலர் ஸ்கேட்டிங் ஆண்கள் ஸ்பீட் ஸ்கேட்டிங் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் விக்ரம் 4ம் இடத்தையும், ஆர்யன்பால் சிங் 7ம் இடத்தையும் பிடித்தனர். இப்போட்டியில் தென்கொரிய வீரர்கள் தங்கம், வெள்ளி பதக்கத்தையும், சீன தைபே வீரர் வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்