லைவ்: ஆசிய விளையாட்டு - 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றது இந்தியா

Update: 2023-09-30 01:13 GMT
Live Updates - Page 2
2023-09-30 08:20 GMT

துப்பாக்கி சுடுதல்:

துப்பாக்கி சுடுதல் ஆண்கள் 75-டிரப் ஸ்டேஜ் 1 தகுதி சுற்றில் இந்தியாவின் டெரியஸ் 2ம் இடத்தையும், சொரவர் சிங் 6ம் இடத்தையும், பிரித்வி ராஜ் 19ம் இடத்தையும் பிடித்தனர். இந்த சுற்றில் முதல் 6 இடங்களை பிடிக்கும் வீரர்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்பதால் இந்திய வீரர்கள் டெரியஸ் மற்றும் சொரவர் சிங் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

துப்பாக்கி சுடுதல் டிராப் 75 ஆண்கள் குழு பிரிவில் இந்தியா 2ம் இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் குழு பிரிவில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

2023-09-30 07:38 GMT

பதக்க பட்டியல்:

ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் 9 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது.

2023-09-30 07:30 GMT

டென்னிஸ்:

டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ருதுஜா போசெல் இணை சீன தைபே வீரர்களை எதிர்கொண்டது. மிகவும் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் சீன தைபேவை 2-6, 6-3, 10-4 என்ற செட்களில் வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. இந்தியாவின் ரோகன் போபண்ணா-ருதுஜா போசெல் இணை தங்கப்பதக்கம் வென்றனர்.

2023-09-30 07:06 GMT

குத்துச்சண்டை:

குத்துச்சண்டை பெண்கள் 66-75 கிலோ பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் லவ்லினா தென்கொரிய வீராங்கனையை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய லவ்லினா 5-0 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய வீராங்கனையை வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் குத்துச்சண்டை பெண்கள் 66-75 கிலோ பிரிவின் அரையிறுதி சுற்றுக்கு லவ்லினா முன்னேறியுள்ளார். அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் லவ்லினாவுக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது

2023-09-30 07:01 GMT

டேபிள் டென்னிஸ்:

டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா சீன வீராங்கனையை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இப்போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ராவை 4-2 என்ற செட்களில் வீழ்த்தி சீன வீராங்கனை அபார வெற்றிபெற்றார். காலிறுதி சுற்றில் தோல்வியடைந்ததால் மணிகா பத்ரா பதக்க வாய்ப்பை இழந்தார்.

2023-09-30 06:50 GMT

குதிரையேற்றம்:

குதிரையேற்றம் இவெண்டிங் டிரஸ்செஜ் பிரிவின் தனிநபர் சுற்றில் இந்திய வீரர்கள் ஆஷிஷ் விவேக் முதல் இடத்தையும், அபூர்வ கிஷோர் 8ம் இடத்தையும், விகாஷ் குமார் 16ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

அதேவேளை, குதிரையேற்றம் இவெண்டிங் டிரஸ்செஜ் பிரிவின் குழு சுற்றில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. அடுத்த சுற்றான கிராஸ் கண்ட்ரி நாளை நடைபெற உள்ளது.

2023-09-30 06:22 GMT

குத்துச்சண்டை:

குத்துச்சண்டை பெண்கள் 50-54 கிலோ காலிறுதி சுற்றில் இந்தியாவின் பிரீத்தி கஜகஸ்தான் வீராங்கனையை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரீத்தி 4-1 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனையை வீழ்த்தி அபார வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் பிரீத்தி குத்துச்சண்டை பெண்கள் 50-54 கிலோ பிரிவில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அரையிறுதி சுற்றுக்குள் முன்னேறியுள்ளதால் பிரீத்திக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது. 

2023-09-30 05:49 GMT

டேபிள் டென்னிஸ்:

டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் காலிறுதி சுற்றில் இந்தியா - தென்கொரியா மோதின. இந்தியாவின் மானுஷ் ஷா, மானவ் தக்கார் இணை தென்கொரிய வீரர்களை எதிர்கொண்டனர். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 3-2 என்ற செட் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தென்கொரியா வெற்றிபெற்றது. 

2023-09-30 05:38 GMT

வாலிபால்:

வாலிபால் பெண்கள் பிரிலிமினெரி ரவுண்ட் பிரிவு ஏ சுற்றின் முதல் போட்டியில் இந்தியா - வடகொரியா மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 3-1 என்ற செட் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வடகொரியா வெற்றிபெற்றது.

2023-09-30 05:29 GMT

பிரிட்ஜ்:

பிரிட்ஜ் ஆண்கள் குழு பிரிவில் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது. பிரிட்ஜ் பெண்கள் குழு பிரிவில் இந்திய அணி 7ம் இடத்தில் உள்ளது. பிரிட்ஜ் கலப்பு குழு பிரிவில் இந்திய அணி 6ம் இடத்தில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்